/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆட்டோக்கள் பேருந்து சேவை இல்லாததால் அவதி
/
கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆட்டோக்கள் பேருந்து சேவை இல்லாததால் அவதி
கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆட்டோக்கள் பேருந்து சேவை இல்லாததால் அவதி
கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆட்டோக்கள் பேருந்து சேவை இல்லாததால் அவதி
ADDED : மே 17, 2024 09:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கோவில்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், வெளியூரிலிருந்து அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பட்டு சேலை வாங்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
இதனால், காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வெளியூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வருவோரிடம், ஷேர் ஆட்டோக்கள் கட்டண கொள்ளை அடிப்பதால், பக்தர்கள், வெளியூர்வாசிகள் பாதிக்கின்றனர்.
பயணியருக்கு ஏற்றவாறு, 15 முதல் 20 ரூபாய் வரை இஷ்டம் போல் வசூலிக்கின்றனர். வெளியூர்வாசிகளிடம், 150 ரூபாய்க்கு குறையாமல் அடாவடியாக கட்டணம் கேட்கின்றனர்.
ஒரே ஆட்டோவில், 10 பேரை ஏற்றி, நெருக்கடியாக பயணிக்க வேண்டிய கட்டாயம் வெளியூர் பயணியருக்கு ஏற்படுகிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களும், இந்த கட்டண கொள்ளை மற்றும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காகவும், உள்ளூர் மக்களின் தேவைக்காகவும், நகர பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை, பல ஆண்டுகளாகவே உள்ளது. ஆனால், இதுவரை நகர பேருந்து சேவைக்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
மாவட்ட நிர்வாகம், வட்டார போக்கு வரத்து துறை, போலீஸ் ஆகிய துறையினர் இணைந்து, எளிதான போக்குவரத்துக்கும், ஆட்டோக்களின் அடாவடியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே இயக்கும் வகையில், நகர பேருந்து இயக்கப்பட்டால், ஆட்டோக்களின் கட்டண கொள்ளை தடுக்கப்படும் என நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

