/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நா.பேட்டையில் அவதி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
/
நா.பேட்டையில் அவதி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
நா.பேட்டையில் அவதி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
நா.பேட்டையில் அவதி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
ADDED : மார் 09, 2025 03:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அமிர்தகடேஸ்வரர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்டவை உள்ளது.
இங்கு, தண்ணீரை சுத்திகரித்து, 5 ரூபாய்க்கு குடிநீராக வழங்கும் இயந்திர கட்டமைப்பு வசதி அறவே இல்லை.
இப்பகுதி மக்கள் 2 கி.மீ., துாரம் இருக்கும் திம்மராஜம்பேட்டை ஊராட்சி சீயமங்கலம் மற்றும் பூசிவாக்கம் ஊராட்சி பாபாசாகிப்பேட்டை ஆகிய கிராம பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இரு கிராமங்களிலும், தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கும் இயந்திரம் பழுதால், குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, நாயக்கன்பேட்டை கிராமத்தில் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கும் இயந்திர கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.