/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விருதுக்கு வழங்கிய பணம் அரசு பள்ளிக்கு வழங்கல்
/
விருதுக்கு வழங்கிய பணம் அரசு பள்ளிக்கு வழங்கல்
ADDED : செப் 08, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவளூர்:காஞ்சிபுரம் அடுத்த அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் பட்டதாரி ஆசிரியராக சந்திரசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, சமீபத்தில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு சான்று மற்றும் 10,000 ரூபாய் வழங்கினார்.
அவளூர் அரசு மேல் நிலைப்பள்ளி அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்கு, இந்த பணத்தை வழங்கினார். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் கூறுகையில்,மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்' என்றார்.