/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட வாலிபால் போட்டி அயனாவரம் அரசு பள்ளி வெற்றி...
/
மாவட்ட வாலிபால் போட்டி அயனாவரம் அரசு பள்ளி வெற்றி...
மாவட்ட வாலிபால் போட்டி அயனாவரம் அரசு பள்ளி வெற்றி...
மாவட்ட வாலிபால் போட்டி அயனாவரம் அரசு பள்ளி வெற்றி...
ADDED : ஜூலை 30, 2024 07:10 AM

சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து, சென்னை சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான 6வது வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துகின்றன.
போட்டிகள், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று காலை துவங்கின. போட்டியை, தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை, தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான தேவாரம் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, ஆண்களில் 29 அணிகளும், பெண்களில் 19 அணிகளும் என, 48 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்கள் பிரிவில், எட்டு குழுவாக பிரித்து லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
பெண்களுக்கான போட்டியில், அயனாவரம் அரசு பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஆக்ஸ்போர்டு பள்ளியை தோற்கடித்தது.
பிரசிடென்சி பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில் சான் அகாடமி அணியை வீழ்த்தியது. ஆண்களில் செயின்ட் பீட்ஸ் பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஏ.இ.எம்., மெட்ரிக் பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்நது நடக்கின்றன.