/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரவுபதியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
திரவுபதியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 28, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிப்.,8ல் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதி வழியாக வந்த ஊர்வலம் திரவுபதியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம்,108 சங்காபிஷேகம், பல்வேறு நறுமணம் கமழும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.