/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ராம்சர்' சதுப்பு நிலங்களில் சிலைகள் கரைக்க தடை
/
'ராம்சர்' சதுப்பு நிலங்களில் சிலைகள் கரைக்க தடை
ADDED : செப் 07, 2024 07:02 AM
சென்னை: விநாயகர் சதுர்த்தி, இன்று கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் மக்கள், அவற்றை நீர்நிலைகள், கடலில் கரைப்பது வழக்கம்.
ரசாயனம் கலந்துசெய்யப்படும் சிலை களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், விநாயகர்சிலைகளை கரைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிலை தயாரிப்பு சம்பந்தமாக வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், 'சூழலியல்முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட 18 ராம்சர் தளங்கள் மற்றும்பழவேற்காடு ஏரி, கழிமுகங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது' என உத்தரவிட்டது.
மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன், சம்பந்தப்பட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள மாவட்டங்களின் சுற்றுச்சூழல் பொறியாளர்கள்இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் வாரியம் உத்தர விடப்பட்டுள்ளது.