/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன் பறக்க தடை உத்தரவு
/
ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன் பறக்க தடை உத்தரவு
ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன் பறக்க தடை உத்தரவு
ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன் பறக்க தடை உத்தரவு
ADDED : ஏப் 30, 2024 07:27 AM
செங்கல்பட்டு: குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் ட்ரோன் பறப்பதற்கு தடை விதித்தும், தாம்பரம் கமிஷனர் கண்காணிக்கவும், தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொதிகளுக்கு தரைதளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிக்கான, 12 ஸ்ட்ராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவிபேட்' இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.
இம்மையப் பகுதியில், மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில், வருவாய்த்துறை, எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணும் மையம் பகுதியில், ஓட்டு எண்ணும் ஜூன் 4ம் தேதி வரை, ட்ரோன் பறப்பதற்கு தடை விதித்து அதை தாம்பரம் கமிஷனர் கண்காணிக்க தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் உத்தரவிட்டார்.

