/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்
/
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்
ADDED : பிப் 27, 2025 08:55 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தவிர, வைணவ மகான் ராமனுஜர் அவதார ஸ்தலமாக விளங்கும், இங்குள்ள ராமானுஜர் கோவில் மற்றும் ஸ்ரீபெரும்பதுார் அரசு மருத்துவமனை, தாலுாக்கா அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஆயிரக்கணக்காக ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளது. பொதுகழிப்பறை, குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் பராமரிப்பு இல்லாமல், மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
இரவு நேரங்களில் வரும் மர்ம நபர்கள், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. பயணியருக்கு இடையூறாக பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் அமர்ந்து வருவதால், இரவு நேரங்களில் பணிக்கும் பெண் பயணியர் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், மொபைல் போன் திருட்டு, வழிப்பறி உள்ளிடவைகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.