தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடிப்படை முதலுதவி பயிற்சி காஞ்சியில் துவக்கம்

அடிப்படை முதலுதவி பயிற்சி காஞ்சியில் துவக்கம்

அடிப்படை முதலுதவி பயிற்சி காஞ்சியில் துவக்கம்


ADDED : ஜூலை 07, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 'ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம்' என்ற திட்டத்தின்கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி தரப்பட உள்ளது.

இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், 'ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம்' என்ற மாநில அளவிலான அடிப்படை முதலுதவி பயிற்சி துவக்க விழா, காணொளி வாயிலாக காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்து பேசுகையில், இப்பயிற்சி தினமும் எல்லா மருத்துவர்களின் கிளினிக்கிலும், மருத்துவமனையிலும் நடத்தப்படும்.

நடப்பாண்டு இறுதிக்குள் 100 சதவீத இலக்கை அடைய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வே. பாலகிருஷ்ணன் பயிற்சியை துவக்கி வைத்தார்.

பொருளாளர் பேராசிரியர் டாக்டர் வே.ஞானகணேஷ் மார்பளவு செயற்கை மனித உடல் அமைப்பை வைத்து, அடிப்படை முதலுதவி எவ்வாறு செய்வது என்று செயல்முறை விளக்கம் அளித்தார்.

பயிற்சியில் பங்கேற்ற அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், போலீசார், தீயணைப்பு துறை, பொதுமக்களே முதலுதவியை செய்து காட்டுமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.

மதிப்புறு செயலர் டாக்டர் கா.சு.தன்யகுமார் வரவேற்றார். இணை செயலர் டாக்டர் வெ.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us