/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் - கார் மோதல்: கொரியர் ஊழியர் பலி
/
பைக் - கார் மோதல்: கொரியர் ஊழியர் பலி
ADDED : மே 02, 2024 10:01 PM
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை புளியாந்தோப்பு, பி.கே. காலணியைச் சேர்ந்தவர் முகமது திவார், 34. கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று, மதியம் கொரியர் டெலிவரி செய்வதற்காக, சுங்குவார்சத்திரம் அடுத்த காந்துார் சென்றார்.
மதுரமங்கலம் சாலையில், காந்துார் மேட்டுகாலனி அருகே சென்ற போது, எதிரே வந்த கார், முகமது திவார் பைக் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் ெதரிவித்தனர்.
சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.