/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 11 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
/
காஞ்சியில் 11 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 06, 2025 08:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வனத்துறை சார்பில், 2024- - 25ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, வரும் 8 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமரம்பேடு, ஸ்ரீபெரும்புதுார், செம்பரம்பாக்கம், மண்ணுார், மணிமங்கலம், வையாவூர், பரந்துார், ஊத்துக்காடு, வேளியூர், பொன்னேரி, நத்தம்பேட்டை ஆகிய 11 இடங்களில் உள்ள ஏரிகளில் கணக்கெடுக்க உள்ளனர்.
அதிகாலை 5:00 மணி முதல், காலை 11:00 மணி வரை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில் அரிய வகையிலான பறவைகள் வாழ்வது கண்டறியபட்டால், அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்டமாக, ஏரி, ஈர நிலங்களிலும், இரண்டாம் கட்டமாக காப்பு காடுகளில் 16ல் கணக்கெடுக்க உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வனத்துறையின் 99941 75179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.