தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


ADDED : மார் 10, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுராந்தகம்: வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்துவருகிறது.

செங்கல்பட்டு வனக்கோட்டத்தின் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும் தேர்வு செய்யப்பட்டது.

நேற்று, நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடந்தது.

வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றனர். வரும் 15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us