/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிறந்த நாளில் மரக்கன்று நடும் திட்டம் தியாகி நடுநிலைப் பள்ளியில் துவக்கம்
/
பிறந்த நாளில் மரக்கன்று நடும் திட்டம் தியாகி நடுநிலைப் பள்ளியில் துவக்கம்
பிறந்த நாளில் மரக்கன்று நடும் திட்டம் தியாகி நடுநிலைப் பள்ளியில் துவக்கம்
பிறந்த நாளில் மரக்கன்று நடும் திட்டம் தியாகி நடுநிலைப் பள்ளியில் துவக்கம்
ADDED : செப் 10, 2024 08:01 PM
காஞ்சிபுரம்:சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பள்ளி மாணவ- - மாணவியருக்கு சிறு வயதிலேயே மரங்களை வளர்க்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில், அவர்களின் பிறந்த நாளில் மரக்கன்று நடும் நடும் திட்டம் துவக்க விழா, காஞ்சிபுரம் மாநகராட்சி தியாகி நிதி நாடும் நடுநிலைப் பள்ளில் நேற்று நடந்தது.
காஞ்சி அன்ன சத்திரம், பசுமை இந்தியா, சர்வம் ஆகிய சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.
இத்திட்டம் துவக்க நாளான நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடிய 2 மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் ஈட்டி மற்றும் பூவரசு ஆகிய மரக்கன்றுகளை நட்டனர்.
பள்ளி மாணவ- - மாணவியருக்கு மரங்களின் பயன் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடுவது மட்டுமல்லாமல், இப்பள்ளில் படிப்பை முடித்து பள்ளியில் இருந்து வெளியில் செல்லும் வரை மாணவர்கள் நட்ட மரங்கள், அவர்களின் பெயரை நினைவு கூறும் வரை மரங்கள் செழித்து வளரும் வகையில் முறையாக பராமரிக்கவும் மாணவ- - மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் பிறந்த நாளிலும் மரக்கன்றுகள் நடும் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

