/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : மே 31, 2024 02:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம், ஆவாகுட்டை, சந்து தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக கழிவுநீர் துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடி வருகிறது. சாலையில் பாசி படர்ந்து தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காணாவிட்டால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.