/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆழ்துளை குழாயில் அடைப்பு காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
/
ஆழ்துளை குழாயில் அடைப்பு காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
ஆழ்துளை குழாயில் அடைப்பு காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
ஆழ்துளை குழாயில் அடைப்பு காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
ADDED : ஜூன் 12, 2024 10:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் விநாயகர் கோவில் தெருவில், அப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இப்பகுதியினரின் கூடுதல் தண்ணீர் தேவைக்கும், தெரு குழாயில் தண்ணீர் வராத நாட்களிலும், குடிநீர் தொட்டி நீரை பிடித்து வந்தனர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், ஆழ்துளை குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் வீணாகி வருகிறது. இதனால், இப்பகுதியினர் கூடுதல் தண்ணீர் தேவைக்கு வேறு பகுதிக்கு தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஆழ்துளை குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.