/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED : ஏப் 20, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், வரும் 23ம் தேதி, காலை 7:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதில், பிரபல உற்சவங்களான மூன்றாம் நாள் உற்சவமான வரும் 25ல், காலை கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான வரும் 29ல் காலை தேரோட்டமும் விமரிசையாக நடைபெறுகிறது. மே 2ம் தேதி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் பூவழகி உட்பட பலர் செய்துள்ளனர்.

