/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் தின விழிப்புணர்வு
/
காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் தின விழிப்புணர்வு
ADDED : ஆக 04, 2024 01:11 AM
காஞ்சிபுரம்,:உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு மற்றும் இந்திய குழந்தை நல மருத்துவர்கள் இணைந்து, செவிலிமேடு ஆரம்ப சுகாதார மையத்தில் தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு நடந்தது.
இதில், மாநகராட்சி கவுன்சிலர் மோகன் தலைமை வகித்தார். பெண் மருத்துவர் பிரிவு தலைவர் டாக்டர் நிஷா ப்ரியா, குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
கர்ப்பிணியரும், பாலுாட்டும் பெண்களும் எவ்வகை சத்தான உணவுகள் உட்கொள்ளலாம் என, டாக்டர் விக்டோரியா பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு சத்தான உணவு, சத்து மாவு, இரும்பு சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் அளிக்கப்பட்டன.