/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவுபடுத்த பாலாற்றில் பாலம்
/
சாலை விரிவுபடுத்த பாலாற்றில் பாலம்
ADDED : மே 07, 2024 04:29 AM

வாலாஜாபாத், : சதுரங்கப்பட்டினத்தில் இருந்து திருத்தணி வரை, 105 கி.மீ., துாரத்திற்கு இருவழி சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவு படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
இதில், சதுரங்கப்பட்டினம்- - செங்கல்பட்டு வரையிலான சாலை விரிவாக்க பணி ஏற்கனவே முடிவுற்றது. அதை தொடர்ந்து, காஞ்சிபுரம்- - திருத்தணி மற்றும் காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலை விரிவாக்கப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் பகுதியில் பெருமாள் கோவில் அருகே, சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இச்சாலையின் இடதுபுறம் கோவில் மற்றும் மலை பகுதியும், வலது புறத்தில் பாலாற்று படுகையும் அமைந்துள்ளது.
இதனால், பாலாற்றையொட்டிய வலதுப்புற பகுதியை அகலப்படுத்தி சாலையாக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். இதற்காக பாலாற்றில் கான்கிரீட் துாண் அமைத்து பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அப்பகுதி பாலாற்று படுகையில், 210 மீட்டர் துாரத்திற்கு பாலம் அமைக்கும் பணி துவங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.