ADDED : மே 23, 2024 11:20 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வையாவூர் செல்லும் சாலையில், காஞ்சி புத்த விஹார் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மே மாத பவுர்ணமியன்று கவுதம புத்தரின் பிறந்தநாளை, புத்த பூர்ணிமா விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது.
இதில், காலை 8:00 மணிக்கு உலக அமைதிக்காக புத்த விஹாரின் நிர்வாகி திருநாவுக்கரசு தலைமையில், பவுத்த கொடி ஏற்றப்பட்டது.
புத்த பிக்குகள் புத்தபிரகாசம் குணசீலர், ஜெயசீலர் தலைமையில் ஊர்வலமாக புத்த விஹாருக்கு வந்து சிறப்பு வழிபாடும், தியானமும் நடந்தது. தொடர்ந்து வர்மக்கலை, கராத்தே, சிலம்பம் குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது.
மாலை புத்த விஹார் வளாகத்தில் அமைந்துள்ள அரச மரத்தடியில் திருவிளக்கு ஏற்றி வழிபாடும், போதி வந்தனா எனும் நிகழ்ச்சியும் நடந்தது.
புத்த பூர்ணிமா ஊர்வலம் மற்றும் சிறப்பு தியான வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.