/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைத்த சில மாதங்களிலேயே புதர்மண்டிய ஆதவப்பாக்கம் குளம்
/
சீரமைத்த சில மாதங்களிலேயே புதர்மண்டிய ஆதவப்பாக்கம் குளம்
சீரமைத்த சில மாதங்களிலேயே புதர்மண்டிய ஆதவப்பாக்கம் குளம்
சீரமைத்த சில மாதங்களிலேயே புதர்மண்டிய ஆதவப்பாக்கம் குளம்
ADDED : ஜூலை 22, 2024 11:15 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆதவப்பாக்கம் கிராமம். இப்பகுதியில், சாலையையொட்டி ஒரு ஏக்கர் பரப்பில் பொதுக்குளம் உள்ளது.
அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக அமைந்துள்ள இந்த குளம், கடந்த ஆண்டுகளில் துார்ந்து, போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது.
இதையடுத்து, இந்த குளத்தை துார்வாரி கரையை பலப்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, 2023- - 24ம் ஆண்டுக்கான மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியின் கீழ், இக்குளத்தை சீரமைக்க, 3.18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் அதற்கான பணி துவங்கி அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவு பெற்றது. 3.18 லட்சம் ரூபாய் செலவில், குளம் சீரமைப்பு பணி நடைபெற்றதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடித்த சில மாதங்களிலேயே, ஆதவப்பாக்கம் குளம், புதர்கள் நிறைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
எனவே, ஆதவப்பாக்கம் பொதுக் குளத்தை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.