/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
புதர்மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
புதர்மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
புதர்மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 04, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள தாத்திமேடு தெருவில், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டி, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல்உள்ளது.
எனவே, செடிகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.