/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1.25 கோடியில் கட்டடங்கள் வாலாஜாபாத் ஒன்றியத்தில் திறப்பு
/
ரூ.1.25 கோடியில் கட்டடங்கள் வாலாஜாபாத் ஒன்றியத்தில் திறப்பு
ரூ.1.25 கோடியில் கட்டடங்கள் வாலாஜாபாத் ஒன்றியத்தில் திறப்பு
ரூ.1.25 கோடியில் கட்டடங்கள் வாலாஜாபாத் ஒன்றியத்தில் திறப்பு
ADDED : பிப் 25, 2025 02:02 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்பேட்டை மற்றும் முத்தியால்பேட்டையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தலா 30 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
அதேபோல், முத்தியால்பேட்டையில், காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில் நுாலகத்திற்கு புதிய கட்டட பணி நடந்து வந்தது.
மேலும், கீழ்ஓட்டிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டட பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஒட்டிவாக்கத்தில் 13.57 லட்சம் ரூபாய் செலவிலும், முத்தியால்பேட்டையில் 11.70 லட்சம் ரூபாய் செலவிலும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
புதிய கட்டடங்களுக்கான பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் மருந்தக திறப்பு விழா நடந்தது.
காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், து.தலைவர் சேகர் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.