/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை திட்டத்தால் 2 ஆண்டாக பஸ் வரவில்லை; தவிக்கும் முகலிவாக்கம் பகுதி மக்கள்
/
பாதாள சாக்கடை திட்டத்தால் 2 ஆண்டாக பஸ் வரவில்லை; தவிக்கும் முகலிவாக்கம் பகுதி மக்கள்
பாதாள சாக்கடை திட்டத்தால் 2 ஆண்டாக பஸ் வரவில்லை; தவிக்கும் முகலிவாக்கம் பகுதி மக்கள்
பாதாள சாக்கடை திட்டத்தால் 2 ஆண்டாக பஸ் வரவில்லை; தவிக்கும் முகலிவாக்கம் பகுதி மக்கள்
ADDED : ஆக 16, 2024 11:30 PM

முகலிவாக்கம்- --- மதனந் தபுரம், முகலிவாக்கம்- - மணப்பாக்கம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மந்தகதியில் நடப்பதால், இரண்டு ஆண்டுகளாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் முகலிவாக்கம் பகுதியில், 80 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 2019ல் துவங்கப்பட்டன. இத்திட்டத்திற் காக, 50 கி.மீ., துாரம் கழிவு நீர் குழாய், 2,128, 'மேன் ஹோல்' அமைக்கப்படுகிறது.
மேலும், 7,300 மீட்டர்துாரத்திற்கு விசைக்குழாயும் அமைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில்சந்தோஷ், ராமச்சந்திரன் தெருவிலும், எஸ்.எஸ்.கோவில் தெருவிலும், இரண்டு கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இப்பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தடைபட்டு தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இத்திட்டத்திற்காக முகலிவாக்கத்தின் பல பகுதி களில் சாலை தோண்டப்பட்டது. இதில், 80 சதவீததெருக்களில் பாதாளசாக்கடை பணி முடிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன.
ஆனால், வாகன போக்குவரத்து நிறைந்த மணப்பாக்கம் - -முகலிவாக்கம்; மதனந்தபுரம்- - முகலிவாக்கம் பிரதான சாலைகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.
பூந்தமல்லியில் இருந்து மதனந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம் பாக்கம் வழியாக தடம் எண் - 54 மாநகர பேருந்தும்,குன்றத்துாரில் இருந்துமதனந்தபுரம், முகலி வாக்கம், மணப்பாக்கம் வழியாக, தடம் எண் - 188 மாநகர பேருந்தும் இயக்கப்பட்டன.
அதேபோல, நந்தம்பாக்கத்தில் இருந்து போரூர் வரை மணப்பாக்கம்- - முகலிவாக்கம் சாலையில் சிற்றுந்து இயக்கப்பட்டது. இதனை, பள்ளி, கல்லுாரிமாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர், பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
பாதாள சாக்கடை திட்டம் துவக்கியதால் அந்த இரு சாலைகளிலும் இயக்கப்பட்ட பேருந்துகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், பிரதானபோக்குவரத்திற்கு வழியின்றி, 50க்கும் மேற்பட்ட நகர்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலின்போது, சாலை தற்காலிகமாகசீரமைக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து சிலமாதங்கள் மட்டும்இயக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த சில நாட்களில், மீண்டும் சாலை தோண்டப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து பேருந்து போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ---நமது நிருபர்-- -

