ADDED : மே 10, 2024 12:56 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுகுப்பம் வழியாக செல்லும் வெள்ளை கால்வாயில், 2021 - -22ல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 4.60 லட்சம் ரூபாய் செலவில், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், சிறிய தடுப்பணை கட்டப்பட்டது.
முறையாக பராமரிப்பு இல்லாததால், தடுப்பணையில் கோரைப்புற்கள் புதர்போல மண்டியுள்ளன. இதனால், மழைக் காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. தடுப்பணையில் போதுமான அளவு தண்ணீர் தேங்காத நிலை ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மேட்டுக்குப்பம் வெள்ளை கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் புதர் மண்டி கிடக்கும் கோரைப்புற்களை அகற்றி, கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.