/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை ரத்து
/
குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை ரத்து
ADDED : ஏப் 28, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு பரிகார ஸ்தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகத்தில், பரிவார மூர்த்தி சன்னிதிகளுக்கு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. மே- 1ம் தேதி, மாலை 5:19 மணி அளவில், குரு, மேஷ ராசியில் இருந்து, ரிஷிப ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை இல்லை. மூலவர், உற்சவர் ஆகியோரின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கதிவரன் தெரிவித்தார்.

