ADDED : பிப் 27, 2025 08:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி பயிலும் மாணவ-மாணவியர்க்கான தொழில்நெறி வழிகாட்டு பயிற்சி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறன் வளர்த்துக் கொள்வது போன்றவை பற்றி எடுத்து கூறப்பட்டது. பிளஸ் 2 வகுப்பு படிப்பை முடித்து அடுத்து என்ன படிக்கலாம் என்ற தகவல்களும், போட்டித் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது குறித்தும் கூறப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் குப்புசாமி, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் தாரணி, திறன் பயிற்சி அலுவலர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.