/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் டாக்டர் பலி; நான்கு பேர் காயம்
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் டாக்டர் பலி; நான்கு பேர் காயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் டாக்டர் பலி; நான்கு பேர் காயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் டாக்டர் பலி; நான்கு பேர் காயம்
ADDED : ஜூலை 01, 2024 01:40 AM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், டாக்டர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர்.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராபின் சாமுவேல், 40; பூந்தமல்லி அருகே, வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை, பணி முடிந்ததும் 'மாருதி சுசூக்கி ஆல்டோ' காரை ஓட்டிச் சென்றார்.
மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அடுத்த தரப்பாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்தது.
டாக்டர் சுதாரிப்பதற்குள், மீடியனை தாண்டி எதிர் திசையில் கார் புகுந்தது. அப்போது, எதிரே வந்த 'ஹூண்டாய் கிரெட்டா' கார் மீது, ஆல்டோ கார் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராபின் சாமுவேல், சம்பவ இடத்திலேயே பலியானார். கிரெட்டா காரில் வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த முருகன், 42, மேகலா, 39, பிரன்னா, 22, கணேஷ் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர்.
இவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.