/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'காஸ்' குழாய் பணி அரைகுறை ஒரகடத்தில் விபத்து அபாயம்
/
'காஸ்' குழாய் பணி அரைகுறை ஒரகடத்தில் விபத்து அபாயம்
'காஸ்' குழாய் பணி அரைகுறை ஒரகடத்தில் விபத்து அபாயம்
'காஸ்' குழாய் பணி அரைகுறை ஒரகடத்தில் விபத்து அபாயம்
ADDED : ஆக 20, 2024 11:27 PM

ஸ்ரீபெரும்பதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரகடத்தில், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ‛காஸ்' பைப்லைன் பணியால், நெரிசல் மற்றும் விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் காஸ் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, சாலையோரங்களில் குழாய் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு மாதங்களாக குழாய் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், வாகன போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள பள்ளத்தின் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், ‛பீக் ஹவர்ஸ்‛ நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறன்றன.
எனவே, குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.