/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் பணியை தடுத்ததாக புகார் ஏகனாபுரத்தில் 10 பேர் மீது வழக்கு
/
தேர்தல் பணியை தடுத்ததாக புகார் ஏகனாபுரத்தில் 10 பேர் மீது வழக்கு
தேர்தல் பணியை தடுத்ததாக புகார் ஏகனாபுரத்தில் 10 பேர் மீது வழக்கு
தேர்தல் பணியை தடுத்ததாக புகார் ஏகனாபுரத்தில் 10 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 23, 2024 03:49 AM
ஸ்ரீபெரும்புதுார், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிதாக அமைய உள்ளது.
இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. அதில் 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது.
பரந்துாரில் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தினர், நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க மாட்டோம் எனவும், கிராமத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை, 12 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியிருந்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஏகனாபுரம் கிராமத்திற்கு சென்று, அரசு ஊழியர்கள் மட்டுமாவது ஓட்டளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது கிராமத்தினர், தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து தாசில்தார் சுந்தரமூர்த்தி, சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'ஏகனாபுரம் கிராம மக்களை ஓட்டளிக்கவிடாமல் சிலர் தடுப்பதாக புகார் வந்தது. விசாரிக்க சென்ற என்னை அப்பகுதியைச் சேர்ந்த கதிரேசன், சுப்ரமணி, பலராமன், கவாஸ்கர், சுதாகர், விவேகானந்தன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் திட்டினர். தேர்தல் பணியை செய்யவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின்படி, 10 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, நேரில் ஆஜராகும் படி பேலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து, அந்த 10 பேர் உட்பட, கிராமத்தினர் 50க்கும் மேற்பட்டோர், காவல் நிலையத்திற்கு நேற்று காலை வந்தனர். போலீசாரின் விசாரணைக்கு பின், அனைவரும் அனுப்பப்பட்டனர்.

