/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வான மின் வழித்தடத்தால் கால்நடை விவசாயிகள் அச்சம்
/
தாழ்வான மின் வழித்தடத்தால் கால்நடை விவசாயிகள் அச்சம்
தாழ்வான மின் வழித்தடத்தால் கால்நடை விவசாயிகள் அச்சம்
தாழ்வான மின் வழித்தடத்தால் கால்நடை விவசாயிகள் அச்சம்
ADDED : ஜூன் 17, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டலம், : காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் கிராமத்தில் இருந்து, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோர வயல்வெளியில் மின் வழித்தடம் செல்கிறது. இதில், சில மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
குறிப்பாக, ஒரு மின் வழித்தட கம்பி அறுந்து விழுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த வயல்வெளியாக ஆடு, மாடு ஓட்டிச் செல்லும் கால்நடை விவசாயிகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் வழித்தடத்தை இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளன.