/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் உலா வரும் கால்நடைகள் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் உலா வரும் கால்நடைகள் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையில் உலா வரும் கால்நடைகள் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையில் உலா வரும் கால்நடைகள் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 16, 2024 05:34 AM

வாலாஜாபாத் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில், கூடுதல் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், ஊத்துக்காடு கிராம பகுதியில் கால்நடைகள் பராமரிப்போர், கால்நடைகளை முறையாக வீட்டு கொட்டகையில் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இதனால், பசுக்கள் மற்றும் காளை மாடுகள் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் வளாகம் மற்றும் அப்பகுதி சாலையில் சுற்றி திரிகின்றன.
இரவு மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கோவில் எதிரே உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதோடு, கோவிலுக்குவரும் பக்தர்கள் கால்நடைகளால் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளைகட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.