/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மீடியனில் உலா வரும் கால்நடைகள்
/
நெடுஞ்சாலை மீடியனில் உலா வரும் கால்நடைகள்
ADDED : ஆக 12, 2024 03:30 AM

மதுமரங்கலம், : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதில், மதுரமங்கலம் அடுத்த பிள்ளைச்சத்திரம் கூட்டுச்சாலை மீடியனில் வளர்ந்துள்ள புற்களை மாடுகள் மேய்கின்றன. அப்போது, கால்நடைகள் சண்டை போட்டுக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்கின்றன.
இதன் காரணமாக, பெங்களூரு, வேலுார், காஞ்சிபுரம் மார்க்கம் மற்றும் சென்னை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், எதிர்பாராத விதமாக மாடுகள் குறுக்கே வருவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மீடியனில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளை தடுக்கவும், தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.