/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரியபெரும்பாக்கத்தில் சிமென்ட் சாலை அமைப்பு
/
ஆரியபெரும்பாக்கத்தில் சிமென்ட் சாலை அமைப்பு
ADDED : மார் 03, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரியபெரும்பாக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம்,ஆரியபெரும்பாக்கம் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து மழைக்காலத்தில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இத்தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 15வது நிதிக் குழு மானியம், 2024 - -25வது திட்டத்தின் கீழ், 4.80 லட்சம் ரூபாய் செலவில், பெருமாள் கோவில் தெருவிற்கு, 150 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.