ADDED : ஏப் 29, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த வி.ஐ.பி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம், 68. வங்கியில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், மனைவி லட்சுமி, 58, உடன் வசித்து வருகிறார்.
இவருக்கு இதே பகுதியில் இரண்டு வீடுகள் உள்ளன. நேற்று காலை, லட்சுமி வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் வீடு வாடகைக்கு வேண்டும் என, லட்சுமியுடன் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது, லட்சுமி எதிர்பாராத நேரத்தில், அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், லட்சுமி அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

