/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4-9 ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் மாற்றம்
/
4-9 ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் மாற்றம்
UPDATED : மார் 30, 2024 07:16 PM
ADDED : மார் 29, 2024 08:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10 ம் தேததி நடைபெற இருக்கும் அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதி நடைபெறும் . அதே போல் ஏப்ரல் 12 ம் தேதி நடைபெற இருக்கும் சமூக அறிவியல் பாட தேர்வு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தெரிவித்து உள்ளது. முன்னதாக உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்குமாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

