/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை
/
பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை
ADDED : ஆக 01, 2024 01:19 AM

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், அரசாலையம்மன் என்ற வராஹி கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
தினசரி இரவு 8:00 மணி அளவில் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில், வராஹி அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நேற்று காலை 10:30 மணி அளவில், பள்ளூர் காலனி மக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். இதை, சிவாச்சாரியர் அகாஷ், வராஹி அம்மனுக்கு சாத்தினார்.
தொடந்து, திருமாங்கல்யம் அணிவித்து, துாப தீபாராதனை காட்டப்பட்டது. அடுத்து தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தப்பட்டது. தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.