/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
/
சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ADDED : ஜூலை 26, 2024 02:17 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் மஹா பெரியவர் மணிமண்டபம் அருகே அமைந்துள்ள பூஜா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதிசங்கர விஜகேயந்திரசரஸ்வதி சுவாமிகள், சந்திர மவுலீஸ்வரர் பூஜையுடன், சாதுர்மாஸ்ய விரதத்தை நேற்று துவக்கினார்.
இந்த விரத நாட்களின் போது துறவியர்களைசந்தித்து அவர்களிடம் ஆசி பெறுவது சிறப்பாகும்என்பதால் துவக்க நாளான நேற்று, திரளான பக்தர்கள் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஓரிக்கை முகாம் அலுவலகமேலாளர் ஜானகிராமன், ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி அய்யர் செய்திருந்தனர்.