/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சென்னை - பெங்களூரு சாலை
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சென்னை - பெங்களூரு சாலை
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சென்னை - பெங்களூரு சாலை
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சென்னை - பெங்களூரு சாலை
ADDED : ஜூலை 06, 2024 12:21 AM

ஆரியபெரும்பாக்கம்,:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆறு வழிச்சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன. இதில், வெள்ளைகேட் மற்றும் ஆரியபெரும்பாக்கம் ஆகிய மேம்பாலங்களின் இடையே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளைகேட் மேம்பாலம் சமத்துவபுரம் கூட்டு சாலை அருகே, சர்வீஸ் சாலை இருக்கும் போது, கனரக வாகனங்கள் பிரதான சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, வேலுார் ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் வெள்ளைகேட் சமத்துவபுரம் அருகே, வாகன விபத்தில் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை தடுத்து நிறுத்த, ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.