/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத்தில் சிப்காட் திட்டம் வரும்... ஆனா?:சிறு துரும்பை கூட கிள்ள வில்லை
/
வாலாஜாபாத்தில் சிப்காட் திட்டம் வரும்... ஆனா?:சிறு துரும்பை கூட கிள்ள வில்லை
வாலாஜாபாத்தில் சிப்காட் திட்டம் வரும்... ஆனா?:சிறு துரும்பை கூட கிள்ள வில்லை
வாலாஜாபாத்தில் சிப்காட் திட்டம் வரும்... ஆனா?:சிறு துரும்பை கூட கிள்ள வில்லை
ADDED : பிப் 23, 2025 09:32 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் அறிவித்து, ஐந்து ஆண்டுகள் ஆகியும், எந்த வித பணிகளும் துவங்காததால், திட்டம் வருமா, வராதா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரகடம் மருத்துவப்பூங்கா, வல்லம் வடகால், திருமுடிவாக்கம், நெமிலி ஆகிய பகுதிகளில், 229 ஏக்கரில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.
இதில், கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை, கண்ணாடி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு விதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதன் வாயிலாக, படித்த பட்டதாரிகளின் வேலை வாய்ப்பும், புதிய தொழில் துவங்குவற்கு தொழிற்சாலைகளின் வாய்ப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
வாலாஜாபாத் தாலுகா வல்லப்பாக்கம் பகுதியில் 118 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமைய உள்ளது என, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு முன்னரே, தமிழ்நாடு தொழிலியல் நோக்கத்திற்கு, நிலம் எடுப்பு சட்டத்தின் கீழ் நிலங்கள் எடுக்கப்பட உள்ளது என, 2020ம் ஆண்டு நில எடுப்பு சிறப்பு மாவட்ட அலுவலர்களை அரசு அறிவித்து உள்ளது.
அரசு, சிப்காட் பகுதிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு, அறிவித்து ஐந்து ஆண்டுகளாகியும், கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களுக்கு இழப்பீடு எவ்வளவு வழங்கப்பட உள்ளது என, அரசு அறிவிக்கவில்லை. வல்லப்பாக்கம் பகுதியில் தொழில் பூங்கா வருகிறதா ? வரவில்லையா என, சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரும், வல்லப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.
மனுவில், 'நில எடுப்பு செய்து, ஐந்து ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்கவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட சிரமப்படுகிறேன். நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக , 'நில எடுப்பு சட்டப்பிரிவின் படி அறிக்கை அரசிற்கு அனுப்பி உள்ளோம். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. நில மதிப்பு நிர்ணயம் செய்தவுடன் இழப்பீடு தொகை வழங்கப்படும்' என, இருங்காட்டுக்கோட்டை விரிவாக்க திட்ட தனி தாசில்தார், அரசுக்கு பதில் அனுப்பி உள்ளார்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் விரிவாக்க திட்டம் நில எடுப்பு அலுவலர் ஒருவர் கூறியதாவது:
வல்லப்பாக்கம் சிப்காட்டிற்கு நில எடுப்பு தொடர்பாக, நில நிர்வாக ஆணையரிடம் இருந்து, சில குறிப்புகளை பின் பற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்புகளை பின் பற்றி நிலம் எடுப்பு தொடர்பாக கோப்பு தயாரித்து, மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின்படி அரசு ஒப்புதல் பெற்ற பின் இழப்பீடு வழங்கபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

