/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சி.கே.டி., 2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை வரைந்து உலக சாதனை
/
சி.கே.டி., 2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை வரைந்து உலக சாதனை
சி.கே.டி., 2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை வரைந்து உலக சாதனை
சி.கே.டி., 2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை வரைந்து உலக சாதனை
ADDED : பிப் 15, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார்:இந்திய தர நிர்ணய அமைவனம் பி.ஐ.எஸ்., பொருட்களுக்கான தர உரிமை, மேலான்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி மற்றும் கலைப் பொருட்களுக்காக ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவையின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நுகர்வோர் உரிமைகள் , தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, உலகின் மிகப்பெரிய பி.ஐ.எஸ்., முத்திரை வரையும் சாதனை நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரில் நேற்று நடந்து.
உணவு நுகர்வோர் மற்றும் பொது விநியோகம் தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி., பங்கேற்று, பி.ஐ.எஸ்., முத்திரை சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவன அலுவலர்கள் இணைந்து, இந்தியாவில் நம்பிக்கை மற்றும் தர உறுதிப்பத்திரங்களின் சின்னமாக உள்ள, பி.எஸ்.ஐ., முத்திரையை, பி.எஸ்.ஐ., ஐ.எஸ்.ஐ., சி.ஆர்.எஸ்., மற்றும் ஹால்மார்க் உள்ளிட்ட முத்திரைகளை பதித்து, 2,030 சதுர அடி உள்ள உலகின் மிக பெரிய பி.ஐ.எஸ்., முத்திரையை வரைந்து சாதனை படைத்தனர்.
மொத்தம் 2,36,000 முத்திரைகளை பதித்து உருவான இந்த படைப்பு, யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில், பி.எஸ்.ஐ., தெற்கு மண்டல துணை இயக்குனர் பிரவீன் கன்னா, தெற்கு மண்டல ஆய்வகத்தின் தலைவர் மீனாட்சி கணேசன், சென்னை கிளை அலுவலக தலைவர் பவானி, ஸ்ரீபெரும்புதுார் காங்.,- எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவமனை பல்கலைக்கழக இருதயவியல் துறை பேராசிரியர் மருத்துவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.