/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரு தரப்பினரிடையே காஞ்சியில் மோதல்
/
இரு தரப்பினரிடையே காஞ்சியில் மோதல்
ADDED : மே 23, 2024 11:23 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் தென்கலை மற்றும் வடகலை தரப்பினரிடையே அண்மைக் காலமாக பிரச்னை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்ற வழக்கு பற்றியும், இரு தரப்பும் பிரச்னை செய்யாமல் இருக்க வேண்டும் என, ஏற்கனவே கோவில் நிர்வாகம், கோவிலுக்குள்ளேயே நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவங்கி, நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை சேஷ வாகன உற்சவம் நடந்தது.
இதில், கங்கைகொண்டான் மண்டபம் அருகில் சுவாமிக்கு மண்டகப்படி நடந்தபோது, வடகலை தரப்பினர் மந்திரபுஷ்பம் பாடினர்.
அப்போது, வடகலை தரப்பினருக்கும், தென்கலை தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இரு தரப்பும் வாக்குவாதம் செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.