/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் தர்ணா
/
சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் தர்ணா
ADDED : ஆக 14, 2024 10:40 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், சுகாதார பிரிவின் கீழ், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 100 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 400 பேரும் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு, கையுறை, பாதுகாப்பு ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர வழங்குவதில்லை என, ஏற்கனவே துப்புரவு பணியாளர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாத சம்பளமும் சரிவர வழங்காததால், இந்திரா காந்தி சாலையில், புதிதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக வாசலில், ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், 20க்கும் மேற்பட்டோர், நேற்று, காலை 7:00 மணியளவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூலை மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை என ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம், பெண் துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'அடுத்த சில நாட்களில் சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்த பின், போராட்டத்தை கைவிட்டு பணிக்குதிரும்பினர்.