/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு அதிகாரிகள் செயல் சங்க ஊழியர்கள் கொதிப்பு
/
கூட்டுறவு அதிகாரிகள் செயல் சங்க ஊழியர்கள் கொதிப்பு
கூட்டுறவு அதிகாரிகள் செயல் சங்க ஊழியர்கள் கொதிப்பு
கூட்டுறவு அதிகாரிகள் செயல் சங்க ஊழியர்கள் கொதிப்பு
ADDED : செப் 05, 2024 08:01 PM
காஞ்சிபுரம்:ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களை ஒருமையில் பேசுவதாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியருக்கு, அத்துறை ஊழியர் சங்க கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மேலாளர்கள் செயல்பாடு மேம்படுத்தும் விதமாக, பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்துகின்றனர். இதனால், பணி குறியீட்டில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என, அறிவுரை வழங்குவதில்லை. மாறாக ஒருமையில் பேசி வருகின்றனர்.
குறிப்பாக, 'சோறு சாப்பிடுகிறீர்களா... இல்லை வேறு ஏதேனும் சாப்பிடுகிறீர்களா' என பேசுகின்றனர். வங்கி பணியாளர்கள் ஒவ்வொருவரும் தலா 1 லட்சம் ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என, கூறுகின்றனர். மேலும், 'அனைவரும் கேன்சர் வந்து தான் சாகப்போகிறீர்கள்' என, சாபம் விடுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த போக்கு தொடருமானால், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.