/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்தையை துாய்மையாக வைக்க வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
/
சந்தையை துாய்மையாக வைக்க வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
சந்தையை துாய்மையாக வைக்க வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
சந்தையை துாய்மையாக வைக்க வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : மார் 07, 2025 12:46 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் பற்றி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். முதலாவதாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அலுவலகத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணியை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டு இயங்கிவரும் ராஜாஜி காய்கறி சந்தையில் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு, சந்தையில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் ஆய்வு மேற்கொண்டு, சந்தையை துாய்மையாக வைத்து கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின், மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேட்டில் உள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, மருந்தகத்திலுள்ள மருந்துகளின் இருப்பு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளை ஆய்வு செய்து, திருக்காலிமேட்டில் இயங்கிவரும் ரேஷன் கடையை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தையும், இருப்பு பதிவேட்டையும் ஆய்வு மேற்கொண்டார். அருகில் உள்ள ஊர்ப்புற நூலகத்திலுள்ள புத்தகங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளர் கணேசன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.