/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி பட்டு பூங்காவில் கலெக்டர் சோதனை
/
காஞ்சி பட்டு பூங்காவில் கலெக்டர் சோதனை
ADDED : ஆக 03, 2024 01:15 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பட்டு கைத்தறி ரகங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கைத்தறி பணிகளை மேற்கொள்ளவும், காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் பட்டுப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா, 75 ஏக்கரில், 82.56 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு, 2021 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது, 24 கைத்தறி கூடங்களில், 12 தறிக்கூடங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள, 12 தறிக்கூடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பூங்காவில் 470 தறிகள் நிறுத்தப்பட்டு, அதன் வாயிலாக 650 நெசவாளர்கள் நேரடியாகவும், 350 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கலெக்டர் கலைச்செல்வி பூங்காவை பார்வையிட்டார். பூங்காவில் நடைபெற்று வரும் நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாமையும் பார்வையிட்டு, நெசவாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.