/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலினத்தை கூறும் ஸ்கேன் மையம் மீது நடவடிக்கை மருத்துவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 03, 2024 11:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், தனியார் மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் மையங்கள், தனியார் தொழிற்சாலை மருத்துவர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், குழந்தை திருமணம், வளரிளம் பருவத்தில் கர்ப்பம், சிசு பாலினம் தெரிவிக்காதது, தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், காசநோய் உள்ளிட்டவை பற்றியும் அரசு திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.
அப்போது, கர்ப்ப காலத்தில் சிசுவின் பாலினத்தைக் கூறும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கலைச்செல்வி எச்சரித்தார்.
குழந்தை திருமணத்தை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து தகவல் கொடுக்காத தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், 92 ஸ்கேன் மையங்கள், 50 மருத்துவர்கள், 82 தொழிற்சாலை மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.