ADDED : ஏப் 26, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை,:வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், வண்டலுார் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, படப்பை அருகே சாலமங்கலம் பகுதியை கடந்து சென்றபோது திடீரென சாலையோரம் நின்றது.
அப்போது, பின்னால் பாறைக் கற்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, கன்டெய்னர் லாரியின் மீது மோதியது.
இதில், டாரஸ் லாரியின் முன்பக்கம் சேதமானது. இந்த லாரியை ஓட்டிச் சென்ற கருணாநிதி, 56, என்பவரின் இரு கால்களும் நசுங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், ஓட்டுனர் கருணாநிதியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால், அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

