/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
/
வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஜூன் 13, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு:மாங்காட்டில் பழமை வாய்ந்த வெள்ளீஸ்வரர்கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில், சுக்கிரன்பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.
ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் விழா, நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கேடயம் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.
இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி,மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.