/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமுதாய அமைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சமுதாய அமைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 05, 2024 08:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தகவல் தொடர்பு திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். திட்டம் சார்ந்த துறையில் ஓராண்டு களப்பணியில் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், செப்., 13ம் தேதிக்குள், 'திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம்' என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.