ADDED : ஏப் 08, 2024 11:26 PM

அ நிறம் | அளவு
சிமென்ட் காரை உதிர்ந்த மின்கம்பம்
குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, வைப்பூர் கிராமம், மேட்டுத் தெருவில் உள்ள மின் கம்பம், சிமென்ட் காரை உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில், எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றது.
காற்று வேகமாக வீசும் போது, மின் கம்பம் குடியிருப்புகளின் மீது விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. மின் விபத்து ஏற்படும் அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர்.
உயிர் சேதம் ஏற்படும் முன், கம்பத்தை மாற்றி அமைக்க, மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.ஆறுமுகம், வைப்பூர்.
